Wednesday, 23 November 2016

ஏ.டி.எம்-இல் பணம் நிரப்ப ரூ.1.37 கோடியுடன் சென்ற வேன் திடீர் மாயம்

                                                           
ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடு காரணமாக ஏ.டி.எம்-இல் பணம் நிரப்பும் பணியை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கே.ஜி சாலையில் அமைந்துள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணம் நிரப்ப சென்ற வேன் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வேனில் ரூ.1 கோடியே 37 லட்சம் பணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வேன் டிரைவர் பணத்துடன் தப்பினாரா? அல்லது டிரைவருடன் வேனை யாராவது கடத்திவிட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 
டிரைவரின் மொபைல் எண் சுவிட்ச் ஆகியுள்ளதால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடைய சிம்-இன் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து போலீஸார் டிராக் செய்ய முயன்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

13 வயதில் தந்தையான சிறுவன்..! 12 வயது சிறுமியை தாயாக்கினான்..!!

                                                           
சிறு குழந்தைகள் பொம்மையை வைத்து அம்மா, அப்பா விளையாட்டை விளையாடுவது போல் உண்மையிலேயே 13 வயது சிறுவனும், 12 வயது சிறுமியும் ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளனர்.
தெற்கு இத்தாலியின் பாரிஸ் நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாக படிக்கும் இந்த சிறுவன் மற்றும் சிறுமியும் நெருங்கி பழகவே அந்த சிறுமி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி ஆன அந்த சிறுமிக்கு பாரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையை தாங்களே வளர்ப்பதாக பெற்றோர் ஆன சிறுவர், சிறுமியர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழ் சிறுமி…!!

                                                            
11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்
அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார்.
தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), , முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.
இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான்.
அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.
தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,
ஓர் இந்தியர். அதுவும் தமிழர். ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது
பிசிலி நிறுவனம் The Pride of India – Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11.
TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.
Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian – Visalini என அரை மணி நேர Documentry படத்தை ஒளிபரப்பியது.
நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது *விசாலினிக்கு வயது 13 தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது
ஒரு Phone Call. Our Prime Minister Mr.Modi wants to meet your Daughter Visalini என்று.
பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம் என்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி
விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார்
என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.
*உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.
உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு மினி level 160. ஆனால் விசாலினியின் மினி level225.
உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.
இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்

ரஜினி போல் வந்திருக்க வேண்டிய ஒரு சூப்பர் ஹீரோ..! கோமாளி ஆன கதை..பகீர்..பகீர்..பகீர்..!

                                                                 
               
1977- துவங்கிய  பாரதி ராஜாவின் திரைப் பயணம் துவங்கியது. இவரது படங்கள் வரிசையாக மாபெரும் வெற்றி பெற்ற காலகட்டம் அது.
பதினாறு வயதினிலே படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின் வந்த அடுத்த படம் கிழக்கே போகும் ரயில். அதில் தான் வசீகரமான ஒரு இளைஞன் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
அவர் பெயர் சுதாகர். அந்தப் படத்தின் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர்  ராதிகா. இந்தப் படமும் பெரிய வெற்றி.
ஆரம்பித்தது சுதாகர் வெற்றிப் பயணம். சுதாகர், ராதிகா என்றால் தமிழ் ரசிகர்களுக்கு நிஜ காதலர்கள். இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்தார்கள்.
காதல் வதந்திகளும் ரெக்கை கட்டிப் பயணித்தது. அடுத்தடுத்த ஹீரோயின்கள் கூடவும் சுதாகர் காதல், என்பது போன்ற வதந்திகள். அப்போதைய காலகட்டத்தில் கல்லூரிப் பெண்கள் சுதாகரை வெறி பிடித்தது போல சுற்றி வந்தார்கள்.
அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் எப்போதும் பெண்கள் நிரம்பி வழிந்தார்கள். கணக்கு வழக்கு இல்லாத பெண்கள் கூட்டம் ..!
இதில் குடிப் பழக்கமும் ஆரம்பித்தது சுதாகருக்கு.. பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் பெரிய வெற்றி அடைந்த போதிலும் சுதாகர் கவனம் சிதறினார்.
சக்களத்தி என்கிற பட சூட்டிங்கில் சுதாகர் முழு போதையுடன் சூட்டிங் வந்தார் என்கிற வதந்தி காட்டுதீ போல பரவியது. இயக்குனர்கள் பயப்பட ஆரம்பித்தனர்.
நல்ல மார்கெட் இருக்கும் போதே புது பட வாய்ப்புகள் மெல்ல குறைய ஆரம்பித்தது. பெண்கள் கூட்டமும் குறைந்தது.
படங்கள் இல்லை. சம்பாதித்த பணம் எல்லாம் ஆடம்பர வாழ்க்கையில் கரைந்தது. முடிந்தது கதை. மூட்டைமுடிச்சுக்களுடன் ஆந்திரா புறப்பட்டார் சுதாகர்.
அங்கு போயும் வாய்ப்புகள் தேடினார். ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை. காமெடியன் ஆனார்  சூப்பர் ஹீரோ சுதாகர்.
கோமாளி போல சேஷ்டைகள் செய்து நடிக்க ஆரம்பித்தார். ஒரு ஐந்து வருடம் பிழைப்பு ஓடியது. பழக்க வழக்கங்கள் மட்டும் மாறவில்லை என்கிறார்கள்..!
இப்போது இரண்டு சிறு நீரகங்களில் பிரச்னை. பணமும் இல்லை.மருத்துவ சிகிச்சைகளில் காலம் தள்ளி வருகிறார், காதல் இளவரசன் சுதாகர்..!

‘அம்மாவின் தாலி’…! அதிர வைத்த ஒரு காதல்..! அடடா படிங்க.. மிஸ் பண்ணாதிங்க..!

                                                           
காளீஸ்வரி, பாலமுருகன் இருவரும்  கோவில்பட்டி கல்லூரி  ஒன்றில் ஒன்றாகப் படித்தார்கள். பாலுவின்   அப்பா விவசாயி. இரண்டு தம்பிகள்.
பாலுவின்  அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். பாலுவும் பொறுப்பை உணர்ந்து இரவு பகலாக படித்தான். அவனுக்கு எப்படியாவது ஐ ஏ எஸ் பண்ண வேண்டும் என்று ஆசை.
காளீஸ்வரியும்  பாலமுருகனும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். மதியம் சாப்பிட ஒன்றும் இல்லாமல் பன் வாங்கி வந்து சாப்பிடுவான் பாலமுருகன்.
இந்த விசயம் ஒரு நாள் தோழி மூலம் காளீஸ்வரிக்கு தெரிய வந்தது. துடித்துப் போனாள்.  அன்று முதல் பாலுவிற்கும் சேர்த்து மதிய உணவு எடுத்து வந்தாள்.
நான்கு பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். சிறு சிறு உதவிகள் செய்து வந்தாள் அந்த நல்ல மாணவி . மூன்றாவது வருடம்  மிகவும் கஷ்டப்பட்டான் பாலு கல்லூரி பீஸ் கட்ட பணம் இல்லை.
செமஸ்டர் எழுத முடியாது. அன்று மதியம் அழுது விட்டான். காளீஸ்வரியும் கலங்கிவிட்டாள். அன்று மாலை கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் வாடா என்று கூறினாள். மாலை எழு மணிக்கு போனான் பாலு.
கயிறு கூட பிரிக்காத ஒரு தாலி. அவனிடம் நீட்டினாள் காளீஸ்வரி. திடுக்கிட்டான் . என்ன இது என்றான் ?  “என்னோட அம்மா தாலிடா.. அவங்க இறந்து நாலுவருசம் ஆச்சு. பூஜை ரூம்ல வச்சிருந்தோம். பூஜை ரூம்ல இருக்கிறதைவிட உன் படிப்புக்கு இது பயன்பட்டால் அதை விட பாக்கியம் எதுவும் இல்லை. நீ இதை  அடகு வச்சுக்கோ. முதல்ல காலேஜ் பீஸ் கட்டுடா என்றாள் .
அழுதுவிட்டான். வேணாம் என்று எவ்வளவோ மறுத்தான் பாலு. காட்டாயப் படுத்தி  கையில் திணித்தாள். அடுத்த நாள் காலேஜ் பீஸ் கட்டினான்.
அந்த வருடம் நல்ல படியாக அரியர்ஸ் எதுவும் வைக்காமல் பாஸ் பண்ணினான். அதன் பின் காளீஸ்வரி காணவில்லை. வேறு ஊருக்கு மாற்றி போய் விட்டாள் காளீஸ்வரி.
அவள் அம்மாவின் தாலியைக் கூட அவள் திரும்ப வாங்கவில்லை. அதன் பின் சில நல்ல உள்ளங்களின் உதவியால் மேற்படிப்பு மேற்கொண்டான்.
அவன் கனவுப்படி ஐ ஏ எஸ் எழுதினான்.  கலெக்டர் ஆனான். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியில் சேர்ந்தான்.
அன்று அலுவலகம் முடிந்து தனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தான் பாலு.ஒரு பெண்ணை கடை வீதியில் பார்த்து திடுக்கிட்டான்.
ஆமாம்… காளீஸ்வரி மெலிந்து போன தேகத்தோடு எதோ பொருள் வாங்கிக் கொண்டிருந்தாள். தனது வாகனத்தை நிறுத்த சொல்லி இறங்கி அவள் முன்னாள் போய் நின்றான் பாலமுருகன்.
அவளுக்கு பயங்கர அதிர்ச்சி.இருவரும் அழுது விட்டார்கள்..! காபி சாப்பிட்டார்கள். அவளின் முகவரியை வாங்கிக் கொண்டான்.
இரண்டே நாட்களில் தனது அப்பா, அம்மா ஆகியோருடன் காளீஸ்வரி வீட்டில் போய் இறங்கினான் பாலு.
ஆச்சரியமாக வரவேற்றாள் காளீஸ்வரி. அப்பாவும் வரவேற்றார். காளீஸ்வரி அன்று கொடுத்த அவள் அம்மாவின் தாலியை அவளுக்கு கொடுத்தான்.
நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும் என்றான். திகைத்து அழுது விட்டாள் காளீஸ்வரி. அவள் அப்பாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
மகளைப்  பார்த்தார். அவள் பேசும் நிலையில் இல்லை. மவுனம் சம்மதம் என்று எண்ணி பேசி முடித்தார்கள்.
இப்போது காளீஸ்வரி ஒரு ஐ ஏ எஸ் மனைவி..! ஒரு குழந்தை இருக்கிறது..!! வாழ்த்துங்கள் நண்பர்களே..! காலத்தே செய்த உதவி..வேறொரு வகையில் நன்மையாக தானே வந்து வாய்க்கிறது..!!

தொழில் அதிபர் என்று நம்பி கல்யாணம் பண்ணிப் போய்..உடம்பெல்லாம் சூடு.. சாவின் நுனியில் தப்பிய மான் விழி நடிகை..!!

                                                                 
நமது நடிகைகள் அழகானவர்கள்..அன்பானவர்கள் என்பதைத் தவிர.. எளிதில் ஏமாறும்  குணம் உள்ளவர்கள் என்பது அதிர்ச்சியான விஷயம்.
காலம் காலமாக வெளிநாட்டு தொழில் அதிபர்கள் என்று நம்பி சரியாக விசாரிக்காமல் அமெரிக்கா மாதிரியான நாடுகளுக்குப் போய் விடுகிறார்கள்.
அங்கு போன சிறிது நாளில் தான் தெரிகிறது கணவன் தொழில் அதிபரே அல்ல என்றும் ஏமாற்றுக் காரன் என்று தெரிந்து கொள்கிறார்கள்.
அதன் பின் அங்கிருந்து தப்பி வர கடுமையாக போராடுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
காரணம் அமெரிக்கா சென்றதுமே இந்த மோசடிக் கணவன்கள் நடிகையரின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்து விடுகிறார்கள். அதனால் நினைத்தபடி தப்பி வருவதில் நிறைய சிக்கல் வந்து விடுகிறது.
அந்த மான் நடிகையும் அப்படித்தான். பெரிய ஹீரோக்கள் அனைவர் கூடவும் ஜோடியாக நடித்தவர். குறிப்பாக கிராமத்து வேடம் என்றால் அவருக்கு அல்வா.
அப்படி ஒரு பாந்தமாக பொருந்திப் போவார். இவர் நடித்த படங்களைப் பார்க்க ஒரு பெரும் கூட்டமே தொன்னூறுகளில் இருந்தது. இவர் கொஞ்ச பீல்டில் இருந்து ஒதுங்கினார்.
வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள். வெளி நாடு வரன் வந்தது. அவர் தனை அமெரிக்காவின் மிகப் பெரும் தொழில் அதிபர் என்று கூறிக் கொண்டார்.
கொஞ்சம் விசாரித்து விட்டு கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள். ஆயிரம் கனவுகளோடு சென்றார் நடிகை. போனதும் தான் தெரிந்தது அவர் ஒரு மருந்துக் கம்பெனியில் ஒர்க்கிங் பார்ட்னர் மட்டுமே என்பது.
அது மட்டுமல்ல மொடாக்குடிகாரர். சேடிஸ்ட் வேறு. இரவு நேரங்களில் அந்த அப்பாவிப் பெண்ணை சிகரெட் வைத்து அந்தரங்க இடங்களில் சுடுவது போன்ற பல கொடுமையான காரியங்கள் செய்யஅதிர்ச்சியில் உடைந்து போனார் அந்த பெண்.
கதற ஆரம்பித்தார். சித்திரவதை தினமும் தொடர்ந்து. நடிகையின் உறவினர்கள் இந்தியன் ஆர்மியில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள்.
ஒரு நாள் தப்பித்து வந்து போன் போட்டு கதறி இருக்கிறார் அந்த அப்பாவிப் பெண். நடுங்கிப் போனார்கள் உறவினர்கள்.
அடுத்தடுத்த நாட்களில் தனது கம்பெனி பார்ட்னர்களையும்  அழைத்து வந்து மனைவியுடன் ஒரே அறையில் தங்க வைத்துள்ளார்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு இரவோடு இரவாக தப்பித்து ஒரு போலீஸ் ஸ்டேஷன் போய் தஞ்சம் அடைந்தார் அந்தப் பெண்.
காவலர்கள் கூட அழைத்து வந்து  அந்தக் கணவனை கடுமையாக மிரட்டி, நடிகையை  விட்டு வந்தனர். அதன் பின் பட்டினி போட்டுக் கொன்றுள்ளார் அந்த  கணவன்.
இதற்குள் இந்தியாவில் இருந்து உறவினர்கள் வந்து சேர்ந்தனர். பாஸ்போர்ட் காணவில்லை என்றான் கணவன்.
மிகுந்த போராட்டத்திற்கு  பின் பாஸ்போர்ட் வாங்கிக் கொண்டு பெண்ணை அழைத்துக்கொண்டு   வந்தனர். இப்போது  அந்த நடிகை டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
பழைய உடம்பு இல்லை மெலிந்து ஓடாகத் தேய்ந்து போய் உள்ளார் நடிகை..! இப்போது உள்ள நடிகைகள் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும் இன்னும் சிலர் ஆண்களிடம் ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்வது பரிதாபம்..!